Friday , December 14 2018
Breaking News
Home / Tag Archives: TN Govt

Tag Archives: TN Govt

காசிமேடு பகுதியில் குளம் போல தேங்கி நிற்கும் கழிவு நீர்: புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் வேதனை

காசிமேடு பகுதியில் குளம் போல தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற கோரி, அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். சென்னை இராயபுரம் காசிமேடு 50வது வார்டு மண்டலம் 5ல் மூன்றாவது தெருவாகிய ஏ.ஜே காலணி பகுதியில் அமைந்துள்ள N.2 காவல்நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் குளம் போல தேங்கி இருப்பதால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடுநிலவுகிறது. மேலும் …

Read More »

நெல்லை மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகளை மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொடர்புதுறையின் உதவி செய்தி தொடர்பாளராக இருந்த சீனிவாசன், பதவி உயர்வு பெற்று துாத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்புத்துறை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், துாத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்புத்துறை செய்தி தொடர்பாளராக இருந்த நவாஸ்கான், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தொடர்புத்துறை செய்தி தொடர்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் …

Read More »

வன்னியர் குல சத்திரிய சமூதாய பொதுச்சொத்துக்களை பாதுகாக்க நிர்வாக குழு: அமைச்சர் வளர்மதி அறிவிப்பு

வன்னியர் குல சத்திரிய சமுயாத்தின் பொதுச்சொத்துக்களை பாதுகாக்க தனி நிர்வாக குழு அமைக்கப்பட உள்ளதாக பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் நிர்வாக குழு அமைப்பது தொடர்பான சட்ட முன்வடிவை தாக்கல் செய்த பின்னர் பேசிய அமைச்சர் வளர்மதி, “வன்னியர் குல சத்திரிய சமூதாயத்தை சேர்ந்த தாராள குணம் கொண்ட கொடையாளிகள், பல்வேறு அறச்செயல் நோக்கங்களுக்காக தங்களது சொத்துக்களை அரசுக்கு காணிக்கையாக வழங்கினர். அத்தகைய நிலைக்கொடைகளின் சொத்துக்களை பாதுகாப்பதற்கும், உயில் …

Read More »

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் தம்பிதுரை: ஆளுநரை குறைகூறவில்லை என சமாளிப்பு

ஆளுநர்களின் வரம்பு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அதிமுக சார்பில் வரவேற்கிறோம். தீர்ப்பை வரவேற்கிறோம் என்பதற்காக தமிழக ஆளுநர் நடத்தி வரும் ஆய்வை நாங்கள் குறைகூறவில்லை. தமிழக ஆளுநர் தனது அதிகாரத்திற்குட்பட்டே ஆய்வுகளை மேற்கொண்டு …

Read More »

277 அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: தமிழக டிஜிபி ராஜேந்திரன் விளக்கம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 அரசு ஊழியர்களை பாதுகாக்கவே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். 277 அரசு ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்ள உண்மைகளை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “துப்பாக்கிச்சூடு நடந்த தினத்தன்று …

Read More »