Saturday , January 19 2019
Breaking News
Home / Uncategorized / அரசுக்கு எதிரான வாக்குகளை பெரும்பான்மையாக பிரிக்கும் அமமுக: கருத்துக்கணிப்பில் தகவல்

அரசுக்கு எதிரான வாக்குகளை பெரும்பான்மையாக பிரிக்கும் அமமுக: கருத்துக்கணிப்பில் தகவல்

மத்திய பாஜக அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிரான வாக்குகளை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் துவக்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான அளவில் பிரிப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

வி.டி.பி அசோசியேட்ஸ் என்கிற அமைப்பு சார்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இக்கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்கிற கேள்விக்கு திமுகவிற்கு என 29.75% மக்களும், அதிமுகவிற்கு என 21.3% மக்களும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு என 12.42% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

புதிதாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் 5.48% ஆதரவையே மட்டுமே பெறுகிறார். அதேநேரம் கட்சி துவக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் 4.78% ஆதரவையே பெறுகிறார்.

மத்திய தமிழகம், டெல்டா பகுதி, சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளில் திமுக முன்னிலை வகிப்பதாகவும், கொங்கு மண்டலத்தில் அதிமுக முன்னிலை வகிப்பதாகவும் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில், அரசுக்கு எதிரான வாக்குகள் மற்றும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரிப்பதால் தென் தமிழகத்தில் கடுமையான போட்டியே நிலவி வருவதாகவும் விடிபி அசோசியேட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினால் ஏற்படும் இந்த வாக்கு பிளவுகள் காரணமாக தமிழகத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவான அலையும் இல்லை என்றும், கூட்டணி கணக்குகளும், சாதிய ஆதரவு கணக்குகளுமே வெற்றியை தீர்மாணிக்கும் என்றும் இக்கணிப்பை மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

About MoonEmp

Check Also

Obtenir Glucotrol – Livraison gratuite dans le monde

Obtenir Glucotrol Générique Glucotrol Comment Se Procurer Du Glipizide En Pharmacie. Glucotrol est utilisé pour …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *