Sunday , October 21 2018
Breaking News
Home / Uncategorized / நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு தயார்: தினகரன் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு தயார்: தினகரன் அறிவிப்பு

திமுக கூட்டணியை உடைத்து வெளிவந்தால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற அவர், சசிகலாவுடன் நீண்ட நேரம் ஆலோசணை மேற்கொண்டார். பின்னர் சிறை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தமிழகத்தில் காவல்துறை ஏவல்துறையாக செயல்படுவதாகவும், காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஆர்.கே நகரில் மதுசூதனன் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டிய தினகரன், தன்னுடைய ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதிலேயே அரசு முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தினகரனிடம் கேள்வி கேட்டபோது, “நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி போட்டியிட்டாலும் 37 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். காங்கிஸ் கூட்டணியா என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது. காங்கிரஸ், திமுக கூட்டணியில் உள்ளது. அதிலிருந்து விலகி வரட்டும், பின்னர் அதைப்பற்றி பேசலாம். ஒவ்வொரு தொகுதியிலும் எங்களுக்கு வேட்பாளர்கள் 3, 4 பேர் தகுதியானவர்கள் உள்ளனர். நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

நீலகிரியில் கனமழை: கூடலூர், பந்தலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *