Friday , December 14 2018
Breaking News
Home / Uncategorized / பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு: 6 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு: 6 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் 24 முதல் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்லுாரி மாணவிகளை தவறான பாதைக்கு அலைப்பேசி மூலம் அழைத்ததாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் துறை காவலர்கள் விசாரித்து, மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலாதேவி வழக்கில் செப்டம்பர் 10ம் தேதிக்குள் குற்றப் புலனாய்வுத் துறை காவலர்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்றும், செப்டம்பர் 24ம் தேதி முதல் ஆறு மாத காலத்திற்குள் வழக்கு விசாரணையை விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

About MoonEmp

Check Also

Le Meilleur Cialis Oral Jelly 20 mg / Pharmacie 24h / Meilleure offre sur les médicaments génériques

Le Meilleur Cialis Oral Jelly 20 mg Générique Cialis Oral Jelly Combien Cialis Oral Jelly …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *